சனி, 15 நவம்பர், 2008

இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இலவசம்

இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா ரிவார்ட்ஸ்(XTRAREWARDS) என்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் நமக்கு ஒரு அட்டை(Card) தருவார்கள். இதன் மூலமாக நாம் போடும் பெட்ரோல் அல்லது டீசலுக்கு புள்ளிகள் தருகின்றார்கள். 75 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் அல்லது டீசல் போட்டால் நமக்கு ஒரு(1) புள்ளி கிடைக்கும். அப்படி நாம் 334 புள்ளிகள் சேர்க்கும் பட்சத்தில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் நமக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் அல்லது டீசல் இலவசமாகத் தருகின்றார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பதாக எனது கார்டில் 334 புள்ளிகள் சேர்ந்ததினால் எனக்கு இலவசமாக 100 ரூபாய்க்குப் பெட்ரோல் கிடைத்தது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.



மேலும் தகவலுக்கு:  https://www.xtrarewards.com/