திங்கள், 3 மார்ச், 2008

கோயம்பேடு அவலம்

நான் நேற்றையத் தினம் என்னுடைய நண்பன் ஒருவனைக் கோயம்புத்தூர் செல்வதற்குப் பேருந்தில் ஏற்றி வழி அனுப்புவதற்காகச் சென்றிருந்தேன். என்னுடைய நண்பன் அங்கிருந்த ஒரு கடையில் 500 மி.லி குளிர்பானம் ஒன்று வாங்கினான். எவ்வளவு என்று அந்தக் கடைக்காரனிடம் கேட்டபோது 23 ரூபாய் என்று கூறினான். அதற்கு நான் M.R.P 20 ரூபாய் என்று தானே போட்டிருக்கிறது என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் சார் இங்கு 3 ரூபாய் அதிகம் வைத்து தான் வாங்குகிறோம் என்று சொன்னான்.

இப்படி அங்குள்ள ஒவ்வொரு கடைக்காரரும் ஒவ்வொரு பொருளுக்கும் கொள்ளை லாபம் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை ஜனங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தான். வசதி உள்ளவர்கள் தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் கொடுத்து சென்றுவிடுகிறார்கள். ஏழை மக்கள் வருகின்ற இடங்களில் இப்படியாப் பகல் கொள்ளை அடிப்பது.

இவை அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் தெரியுமா? இல்லை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறார்களா?

0 கருத்துகள்: