ஒரு சில நாட்களுக்கு முன்பதாக ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றிருந்தேன். கல்லாவில் ஒரு சிறு பையன் உட்கார்ந்து பணத்தை வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு நடுவயதுக்காரர் ஹோட்டலுக்கு வந்து டீ குடித்தார். குடித்து முடித்தப் பின் அந்தப் பையனிடம் தம்பி ஒரு டீ, ஒரு பிஸ்கட் என்று அவனிடம் 10 ரூபாய் நீட்டினார். அவனும் கல்லாவில் பணத்தைப் போட்டு விட்டு வேறு ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு இருந்தான். அவர் அவனிடம் தம்பி மீதிப் பணம் என்று கேட்டார். அதற்கு அவன் "அதான் தருவோம்ல என்ன அவசரம்."
பெரியவர்களை மதிக்க கூடியத் தமிழகத்திலா இப்படி.
எங்குப் போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சென்னைக் கலாச்சாரம்.
வெள்ளி, 15 பிப்ரவரி, 2008
எங்கு போகிறது சென்னை
வியாழன், 14 பிப்ரவரி, 2008
காதலர் தின உடையின் நிறங்கள்
சிகப்பு -- காதல் தோல்வி
பச்சை -- காதலுக்காக எதிர்பார்த்தல்
மஞ்சள் - -- காதலித்தல்
வெள்ளை - காதலில் நாட்டம் இல்லை
நீலம் - இரண்டாவது காதலுக்கு எதிர்பார்த்தல்
கருப்பு -- கடலை போடுவதற்கு மட்டும்
புதன், 6 பிப்ரவரி, 2008
சிங்கார சென்னையின் முயற்சி
"சென்னை மாநகராட்சி கண்ட இடங்களில் துப்பினாலோ அல்லது குப்பைக் கொட்டினாலோ ஏப்ரல் மாதம் முதல் அபராதம் விதிக்கத் தீர்மானித்துள்ளது
கண்ட இடங்களில் துப்பினால் ரூ.50
கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500
சுற்றுப் புறத்தைத் அசிங்கமாக வைத்திருந்தால் ரூ.1000" - பத்திரிக்கைச் செய்தி
இப்படித்தான் அரசு பொது இடங்களில் புகைபிடித்தால் 100 ரூபாய் அபராதம் என்று சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டத்தின் மூலமாக யாருக்காவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா தெரியவில்லை? புகை மன்னர்கள் ஹாயாகப் போது இடங்களில் புகை பிடித்து வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கட்டிக் காக்க வேண்டியக் காவல் துறையைச் சேர்ந்த ஒரு சிலரும் பொது இடங்களில் புகை பிடித்துக் கொண்டு நாங்கள் சட்டத்தின் காவலன் என்று பறை சாற்றுகிறார்கள்.
இந்தச் சட்டத்தையாவது மக்கள் ஒழுங்காக கடைபிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையென்றால் பழையச் சட்டங்களைப் போல இதுவும் ஆகுமா? பொறுத்துருந்துப் பார்ப்போம்.
எந்தச் சட்டம் வந்தாலும் மனிதனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் சட்டம் கொண்டு வந்தாலும் பயன் இல்லை.