சனி, 15 நவம்பர், 2008
இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இலவசம்
மேலும் தகவலுக்கு: https://www.xtrarewards.com/
சனி, 20 செப்டம்பர், 2008
ஜோக் / சிரிப்பு
தாய்: என்னடா சீக்கிரமா பள்ளிக்கூடத்திலிருந்து வந்துட்ட?
மகன்: அம்மா மிஸ் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான் பதில் சொன்னேன் அதான் என்னை சீக்கிரம் அனுப்பிட்டாங்க
தாய்: என் செல்லம் அப்படி என்ன கேள்வி தான் கேட்டாங்க?
மகன்: மிஸ் மேல ராக்கெட் விட்டது யார்னு கேட்டாங்க
செவ்வாய், 3 ஜூன், 2008
கடி ஜோக்
ஒரு வீட்டில் அண்ணன் வாசலில் உட்கார்ந்துப் படிக்கின்ற்றான். அவனுடையத் தம்பி தெருவில் உட்கார்ந்துப் படிக்கின்றான். ஏன்?
அட போங்க அண்ணன் நுழைவுத் தேர்வுக்குப் படிக்கின்றான். தம்பி பொதுத் தேர்வுக்குப் படிக்கின்றான்.
சனி, 31 மே, 2008
கடி ஜோக்
நபர் 1: உன் தலையிலே கொம்பு இருக்கா?
நபர் 2: இல்லை
நபர் 1: திரும்பவும் பார்
நபர் 2: இல்லையே
நபர் 1: இல்லை?
நபர் 2: இல்லை
நபர் 1: நிஜமா?
நபர் 2: இல்லை.
நபர் 1: சரி விடு. குரங்கிற்குக் கொம்பு இருக்குமா என்ன?
வியாழன், 22 மே, 2008
சர்தார்ஜி ஜோக்
சர்தார் விமான நிலையத்தின் தகவல் அறைக்குத் தொலைபேசியில் பேசுகிறார்
சர்தார்: மும்பையிலிருந்து லண்டன் செல்லுவதற்கு எவ்வளவு மணிநேரம் ஆகும்.
வரவேற்பாளர்: ஒரு செகன்ட் சார்
சர்தார்: என்ன ஒரு வேகம் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார்
வியாழன், 24 ஏப்ரல், 2008
அரசு பேரூந்துகளில் கட்டணம் உயர்வு
அரசு பேருந்துகளில் கட்டணம் உயரவில்லை என்று முதல்வரும் அமைச்சரும் சட்டபேரவையில் ஆறிக்கை விடுகிறார்கள். ஆனால் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தி உள்ளார்கள்.
சமீபத்தில் நான் ஊருக்குச் சென்றிருந்தேன். திருநெல்வேலியிலிருந்து பணகுடி செல்வதற்கு வழக்கமாக 14 ரூபாய் தான் ஆனால் பதினைந்து ரூபாய் பயணச்சீட்டுக் கொடுத்தார்கள். நண்பர்களிடம் விசாரித்தபோது பயணக் கட்டணத்தை உயர்த்தி ஒரு மாதம் ஆகின்றது என்று சொன்னார்கள்.
ஆனால் அரசோ இன்னமும் நாங்கள் பயணக்கட்டணத்தை உயர்த்தவில்லை என்று பச்சையாகப் பொய் சொல்லுகிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள்.
சனி, 12 ஏப்ரல், 2008
கடி
மனிதர்: ஏன் இந்த வீட்டிற்குப் பாடி ஸ்பிரே அடிக்கிறீர்கள்.
சர்தார்ஜி: இந்த வீடு வியர்வை சிந்திக் கட்டிய வீடு அல்லவா? அதனால் தான் நான் பாடி ஸ்பிரே அடிக்கிறேன்
திங்கள், 3 மார்ச், 2008
கோயம்பேடு அவலம்
நான் நேற்றையத் தினம் என்னுடைய நண்பன் ஒருவனைக் கோயம்புத்தூர் செல்வதற்குப் பேருந்தில் ஏற்றி வழி அனுப்புவதற்காகச் சென்றிருந்தேன். என்னுடைய நண்பன் அங்கிருந்த ஒரு கடையில் 500 மி.லி குளிர்பானம் ஒன்று வாங்கினான். எவ்வளவு என்று அந்தக் கடைக்காரனிடம் கேட்டபோது 23 ரூபாய் என்று கூறினான். அதற்கு நான் M.R.P 20 ரூபாய் என்று தானே போட்டிருக்கிறது என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் சார் இங்கு 3 ரூபாய் அதிகம் வைத்து தான் வாங்குகிறோம் என்று சொன்னான்.
இப்படி அங்குள்ள ஒவ்வொரு கடைக்காரரும் ஒவ்வொரு பொருளுக்கும் கொள்ளை லாபம் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை ஜனங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தான். வசதி உள்ளவர்கள் தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் கொடுத்து சென்றுவிடுகிறார்கள். ஏழை மக்கள் வருகின்ற இடங்களில் இப்படியாப் பகல் கொள்ளை அடிப்பது.
இவை அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் தெரியுமா? இல்லை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறார்களா?
சனி, 1 மார்ச், 2008
வெள்ளி, 15 பிப்ரவரி, 2008
எங்கு போகிறது சென்னை
ஒரு சில நாட்களுக்கு முன்பதாக ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றிருந்தேன். கல்லாவில் ஒரு சிறு பையன் உட்கார்ந்து பணத்தை வாங்கிக் கொண்டிருந்தான். ஒரு நடுவயதுக்காரர் ஹோட்டலுக்கு வந்து டீ குடித்தார். குடித்து முடித்தப் பின் அந்தப் பையனிடம் தம்பி ஒரு டீ, ஒரு பிஸ்கட் என்று அவனிடம் 10 ரூபாய் நீட்டினார். அவனும் கல்லாவில் பணத்தைப் போட்டு விட்டு வேறு ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு இருந்தான். அவர் அவனிடம் தம்பி மீதிப் பணம் என்று கேட்டார். அதற்கு அவன் "அதான் தருவோம்ல என்ன அவசரம்."
பெரியவர்களை மதிக்க கூடியத் தமிழகத்திலா இப்படி.
எங்குப் போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சென்னைக் கலாச்சாரம்.
வியாழன், 14 பிப்ரவரி, 2008
காதலர் தின உடையின் நிறங்கள்
சிகப்பு -- காதல் தோல்வி
பச்சை -- காதலுக்காக எதிர்பார்த்தல்
மஞ்சள் - -- காதலித்தல்
வெள்ளை - காதலில் நாட்டம் இல்லை
நீலம் - இரண்டாவது காதலுக்கு எதிர்பார்த்தல்
கருப்பு -- கடலை போடுவதற்கு மட்டும்
புதன், 6 பிப்ரவரி, 2008
சிங்கார சென்னையின் முயற்சி
"சென்னை மாநகராட்சி கண்ட இடங்களில் துப்பினாலோ அல்லது குப்பைக் கொட்டினாலோ ஏப்ரல் மாதம் முதல் அபராதம் விதிக்கத் தீர்மானித்துள்ளது
கண்ட இடங்களில் துப்பினால் ரூ.50
கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500
சுற்றுப் புறத்தைத் அசிங்கமாக வைத்திருந்தால் ரூ.1000" - பத்திரிக்கைச் செய்தி
இப்படித்தான் அரசு பொது இடங்களில் புகைபிடித்தால் 100 ரூபாய் அபராதம் என்று சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டத்தின் மூலமாக யாருக்காவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா தெரியவில்லை? புகை மன்னர்கள் ஹாயாகப் போது இடங்களில் புகை பிடித்து வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கட்டிக் காக்க வேண்டியக் காவல் துறையைச் சேர்ந்த ஒரு சிலரும் பொது இடங்களில் புகை பிடித்துக் கொண்டு நாங்கள் சட்டத்தின் காவலன் என்று பறை சாற்றுகிறார்கள்.
இந்தச் சட்டத்தையாவது மக்கள் ஒழுங்காக கடைபிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையென்றால் பழையச் சட்டங்களைப் போல இதுவும் ஆகுமா? பொறுத்துருந்துப் பார்ப்போம்.
எந்தச் சட்டம் வந்தாலும் மனிதனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் சட்டம் கொண்டு வந்தாலும் பயன் இல்லை.